
தமிழகத்திலிருந்து யுபிஎஸ்சி தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 1000 மாணவர்களுக்கு நிதி உதவி வழங்க தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் படி, தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு 10 மாதங்கள் நிதி வழங்கப்படும். இதன்முலம் மாணவர்கள் மாதம் ரூபாய் 7000 பெற்றுக்கொள்ளலாம். மேலும் யுபிஎஸ்சி தேர்வின் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூபாய் 25000-ம், நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூபாய் 50,000-ம் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, யுபிஎஸ்சி 2025 தேர்வில் பதிவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது கணவர் அரசுப் பணியில் பணியாற்றக்கூடாது. பெற்றோர்கள் அரசு பென்ஷன் உதவி பெறக்கூடாது.
வருமானவரிச் சான்றுகள் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள வருமானம் அரசு நிர்ணயித்த வருமானத்திற்கு கீழ் இருக்க வேண்டும். யுபிஎஸ்சி தேர்வு வயது வரம்பு ஆகஸ்ட் 1, 2025 தேதியின்படி 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்பங்களை வட்டாட்சியர் அலுவலகம் அல்லது ஆட்சியர் அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.