ஹோலி கொண்டாட்டத்தின் போது பீகார் மாநில தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராதே ஷ்யாம், தீபு, அன்சு ஆகிய 3 பேர் கொல்லப்பட்டனர். பெங்களூரு சர்ஜாபூர் பகுதியில் 14 மாடி கட்டிடம் கட்டுமான மணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு பீஹார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்துக் வருகின்றனர். இந்த நிலையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

அவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட ஏற்பாடு செய்தனர். அருகில் உள்ள கட்டிட தொழிலாளர்களையும் கொண்டாட்டத்திற்கு அழைத்தனர். அப்போது ஒரு வாலிபரின் சகோதரி எதிர் தரப்பைச் சேர்ந்த ஒருவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனை அறிந்த அண்ணன் எனது தங்கையிடம் நீ எப்படி பேசலாம் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனால் கோபமடைந்த எதிர் தரப்பைச் சேர்ந்த நபர் ராதே ஷ்யாம், தீபு, அன்சு ஆகியோரை இரும்பு கம்பிகள், கண்ணாடி பாட்டில்கள் ஆகியவற்றால் அடித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தரைத்தளத்தில் படுகாயமடைந்த ஒரு தொழிலாளியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.