புதுச்சேரி மாநிலம் பாகூர் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கு மோகன்ராஜ்(26) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மோகன்ராஜ் மோட்டார் சைக்கிளில் மாலை நேரம் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் முல்லோடை- குருவிநத்தம் சாலையில் சென்ற போது திடீரென சாலையின் குறுக்கே வந்த மாடு மோட்டார் சைக்கிள் மீது விழுந்தது.

இதனால் தூக்கி வீசப்பட்ட மோகன்ராஜ் எதிரே வந்த காரில் மோதி படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.