குஜராத் மாநிலத்தின் ஜுனாகட் மாவட்டத்தில், ரூபாவதி கிராமத்தை சேர்ந்த 35 வயதான டயா சவலியா, 2024 ஜனவரி 2ஆம் தேதி காணாமல் போனார். அவரது கணவர் வல்லப், டயா வீட்டிலிருந்து 9 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகள் எடுத்து விட்டு ஓடிப்போய்விட்டதாக போலீசில் புகார் கொடுத்தார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு  மகன் உள்ளார். டயா காணாமல் போய் 13 மாதங்கள் ஆன நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் முதலில் அந்த பகுதியைச் சேர்ந்த ஹார்திக் என்பவருடன் டயா கள்ள உறவில் இருப்பது தெரியவந்தது.

இதில் ஹார்திக் டயாவுடன் தன்னுடைய உறவை முறித்துக் கொள்ள விரும்பினார். ஆனால் அதற்கு டயா ஒப்புக்கொள்ளாத நிலையில் பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர். அப்போது ஹார்திக் ஒரு ஆளில்லா பகுதிக்கு டயாவை அழைத்து சென்று கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் அந்த பெண்ணின் உடலை ஒரு கிணற்றில் வீசிய நிலையில் அவர் தப்பி ஓடிவிட்டார். இதைத்தொடர்ந்து அவருடைய கணவரை டயா ஓடிப் போய்விட்டதாக  நம்ப வைத்துள்ளார். தற்போது கொலை செய்யப்பட்ட டயாவின் எலும்புக்கூடுகளை போலீசார் மீட்டுள்ளனர். அதோடு ஹார்திகையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.