சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த மேட்ச்சின் போது சுப்மன் கில் 46 ரன்களில் அவுட் ஆனார். அவர் பாகிஸ்தான் வீரர் அப்ரார் அஹ்மத் வீசிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் மிக சிறப்பான முறையில் பந்து வீசினார்.

இருப்பினும் கில் அவுட் ஆனதும் அவர் கொடுத்த ரியாக்சன் மிகவும் வித்தியாசமாக இருந்ததோடு அவரை அவுட் ஆகி விட்டீர்கள் பெவிலியன் நோக்கி செல்லுமாறு சைகை மூலம் காண்பித்தார். இது அப்போது பாகிஸ்தான் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் இறுதியில் விராட் கோலியின் அபார சதத்தால் இந்தியா எளிதாக வெற்றி பெற்றதால் அவரின் விமர்சனம் கேலிக்குள்ளாகியுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் தற்போது அப்ரார் அஹ்மத் கொடுத்த ரியாக்ஷனை வைத்து பல்வேறு விதமாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.