
ராகவா லாரன்ஸ் தமிழ் திரை உலகில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் கலக்கி வருகிறார். இவர் இயக்குனராக களம் இறங்கி இயக்கிய அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது. கடைசியாக இவர் நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகி உள்ளது. அடுத்தது காலபைரவர், புல்லட், காஞ்சனா-4 என தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அரசியல் குறித்து பேசி உள்ளார்.
அதாவது என்னை பார்த்து நீங்கள் எப்போது அரசியலுக்கு வர போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். நான் ஏன் அரசியலுக்கு வரணும்? இப்போது நல்லது செய்து கொண்டு தானே இருக்கிறேன். அரசியலுக்கு வந்து மக்கள் பணத்தை வாங்கி மக்களுக்கு நல்லது செய்து அதை போஸ்டர் அடித்து ஒட்டுவதை விட உழைத்த பணத்தில் மனதார மக்களுக்கு செய்யும் நல்லதே பெரியது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.