
இந்திய அணியானது ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்- கவாஸ்கர் கோப்பை தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததால் 10 வருடங்களுக்கு பிறகு பார்டர்- கவாஸ்கர் கோப்பையை பறிகொடுத்தது. மேலும் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்தியா ஒயிட்வாஷ் ஆனது. இதனால் தொடர்ந்து மூன்று முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது.
இந்த தோல்விகளுக்கு இந்தியாவின் கேப்டன் ரோகித் ஷர்மா தான் முக்கிய காரணமாக கருதப்படுகிறார். இதன் காரணமாக ரோகித் சர்மா மீண்டும் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளை தேர்வு செய்வதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவருடைய கெரியர் முடிவுக்கு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பும்ராவை முழுநேர கேப்டனாக நியமிப்பதற்கும் பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.