தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிறகு கைதி என்ற திரைப்படத்தின் மூலம் தனக்கென தனி அடையாளத்தை பிடித்தார். முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்கள் மூலம் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். தற்போது நடிகர் ரஜினிகாந்தை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் கைதி 2 மற்றும் விக்ரம் 2 ஆகிய திரைப்படங்களையும் இயக்க இருக்கிறார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் விஜய் வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய போது சீன் பேப்பர் கொடுக்காமல் இப்படித்தான் இங்கு வரப் போறீங்க இப்படித்தான் அடிக்கணும் என்று லோகேஷ் கனகராஜ் சொன்னதாக இசை வெளியீட்டு விழாவின்போது விஜய் கூறி இருப்பார்.

விஜய் என்னப்பா இதெல்லாம் நான் வீட்டுக்கு போகிறேன் படமே வேண்டாம் என்று நினைக்கும் அளவிற்கு லோகேஷ் நடந்து கொண்டதாக நகைச்சுவையாக கூறினார். இருப்பினும் சீன் பேப்பர் இல்லாமல் இதுதான் கதை என்று அந்த இடத்தில் சொல்லும்போது அது எவ்வளவு கடினம் என்பது புரியும். இதன் காரணமாக அனைவருக்கும் சீன் பேப்பர் கொடுக்கும்படி விஜய் கூறியுள்ளார். அதன் பிறகு ஒவ்வொரு முறையும் இதை வரும்போது சீன் பேப்பர் சீன் பேப்பர் என்று ஒவ்வொரு டோனில் லோகேஷ் கூறுவார். இதனையும் விஜய் மேடையில் கூறும்போது ஒருவேளை நம்மை கலாய்ப்பதற்காக இப்படி கூறுகிறாரோ என்று எண்ணம் வந்ததாக கூறினார்.

நடிகர் விஜய் ஒருமுறை தான் அப்படி மேடையில் சொல்லி இருப்பார். ஆனால் ஒவ்வொரு வருடமும் மாஸ்டர் திரைப்படம் வெளிவந்த நாளின் போது லோகேஷ் மற்றும் விஜய் இருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் வெளியிட்ட இதனை ஞாபகப்படுத்துகிறார்கள். குறிப்பாக விஜய் மற்றும் யோகேஷ் கனகராஜ் இருக்கும் புகைப்படங்கள் அனைத்திலும் ஒரு சீன் பேப்பரை கொடுப்பது போன்று தான் இருக்கிறது. சமீபத்தில் கூட மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து 4 வருடங்கள் ஆனதை கொண்டாடும்போது அப்படி ஒரு புகைப்படத்தை தான் வெளியிட்டார்கள். இதனால் இதுபோன்று இன்னும் எத்தனை புகைப்படங்கள் இருக்கிறதோ என்று தோணுகிறது.