சாட்டையால் அடித்த பிறகு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது, முருகப்பெருமானிடம் எங்கள் வேண்டுதலை ஆறு சாட்டையடிகளாக சமர்ப்பித்தேன். சாட்டையில் அடிப்பது என்பது தமிழ் மரபில் உள்ளது. CCTNS- ல் FIR வெளியாக வாய்ப்பே இல்லை. அது மிகவும் பாதுகாப்பான முறை. காவல்துறை அதிகாரி பேசும்போது எங்கள் நடவடிக்கையில் மாணவி திருப்தி அடைந்ததாக கூறினார். மனம் நொந்து பாதிக்கப்பட்ட மாணவி FIR-ஐ பார்க்கும்போது எப்படி திருப்தியாக இருக்க முடியும்.

முன்னதாகவே அண்ணா பல்கலைக்கழகத்தில் அனைத்து சிசிடிவி கேமராக்களும் வேலை செய்து முதல் முறை தவறு நடந்திருந்தபோதே குற்றவாளி பிடிபட்டிருந்தால் மாணவிகள் திருப்தியாக இருந்திருக்க முடியும். தேர்தல் தோல்வி எனக்கு பெருமைதான் 2026-ல் தோல்வி வந்தாலும் ஏற்றுக்கொள்வேன். லண்டன் பயணத்திற்கு பிறகு என்னுடைய பாதை தெளிவாக ஆரம்பித்து இருக்கிறது. அரசியலை தூரமாக நின்று பார்க்கும்போது நிறைய புரிதல் கிடைத்து இருக்கிறது என கூறியுள்ளார்.