
மேற்குவங்க மாநிலத்தில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு மணப்பெண்ணின் தாய், தோழி ஆகியோரும் கணவரின் இல்லத்தில் தங்கினார். இதனையடுத்து தோழியின் நண்பர்கள், உறவினர்கள், மனைவியின் உறவினர்கள் என மிகப் பெரிய பட்டாளமே மாப்பிள்ளை வீட்டில் தங்கியுள்ளனர். கணவரின் வீட்டில் அத்தனை வசதிகளையும் மனைவி மற்றும் அவரை சார்ந்தவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
கடந்த 2008-ஆம் ஆண்டு கணவர் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் விவாகரத்து வழக்கை தள்ளுபடி செய்தது. அதன் பிறகு கணவர் கொல்கத்தா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் அந்த பெண்ணின் கணவருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவு பிறப்பித்தனர். மேலும் நீதிபதிகள் கூறும்போது, தாம்பத்திய வாழ்க்கைக்கு திரும்பக்கூடாது என்றும் மனைவி தனது தாய் தோழி ஆகியோரை தன்னுடன் தங்க வைத்துள்ளார்.
இது கொடுமையான செயல். தன் குடும்பத்தினரை கணவர் மீது திணிப்பது கொடுமை. இந்த வழக்கில் மனைவியால் கணவர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். கணவரின் இல்லத்தில் தோழி குடும்பத்தினரை தொடர்ந்து தங்க வைத்திருப்பது பதிவுகள் மூலம் உறுதியானது. கணவனுடன் தாம்பத்திய வாழ்க்கைக்கு மறுப்பு தெரிவிக்கும் முடிவை அந்த பெண் ஒருதலை பட்சமாக எடுத்துள்ளார். மேலும் கணவருடன் குடும்பம் நடத்தாமல் போய் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லை. எனவே இந்த வழக்கில் கணவருக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது. அவர் மீது மனைவி கொடுத்த புகார்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.