
தமிழ் சினிமாவில் இந்த வருடம் மொத்தம் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகிய நிலையில், 20-க்கும் குறைவான படங்களே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் உலக அளவில் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களைப் பற்றி தற்போது காணலாம்.
1. தி கோட்
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய ‘தி கோட்’ என்ற திரைப்படத்தில் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் உலக அளவில் ரூ.460 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது.
2. அமரன்
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய ‘அமரன்’ என்ற திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்த படம் கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி அன்று வெளியானது. இந்தப் படம் மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். இப்படம் ரூ. 330 கோடி வசூலித்து 2ம் இடத்தை பிடித்துள்ளது.
3. வேட்டையன்
இயக்குனர் ஞானவேல் இயக்கிய ‘வேட்டையன்’ என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப் பச்சனும் நடித்துள்ளனர். இந்தப் படம் ரூ. 255 கோடு வசூல் செய்து 3ம் இடத்தை பிடித்துள்ளது.
4. மகாராஜா
இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கிய ‘மகாராஜா’ என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த படம் கடந்த ஜூன் மாதம் வெளியானது. இந்தப் படம் பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான வன்கொடுமையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படம் 170 கோடி வசூல் செய்து 4வது இடத்தை பிடித்துள்ளது.
5. ராயன்
நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருந்த ‘ராயன்’ என்ற திரைப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் 156 கோடி வசூல் செய்து 5ம் இடத்தை பிடித்துள்ளது.
6. இந்தியன் 2
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 28 வருடங்களுக்கு பிறகு வெளியான ‘இந்தியன் 2’ என்ற திரைப்படத்தில் கமலஹாசன் நடித்துள்ளார். இப்படம் 150 கோடி வசூல் செய்து 6ம் இடத்தில் உள்ளது.
7. கங்குவா
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய ‘கங்குவா’ என்ற திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார். இந்த படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் என்பவர் இசை அமைத்துள்ளார். இந்த படம் 15 கோடி வசூல் செய்து 7ம் இடத்தை பிடித்துள்ளது.
8. அரண்மனை 4
இயக்குனர் சுந்தர் c இயக்கிய ‘அரண்மனை 4’ என்ற திரைப்படம் கடந்த மே மாதம் வெளியானது. இந்த படம் 100 கோடி வசூல் செய்து 8ம் இடத்தை பிடித்துள்ளது.
9. அயலான்
இயக்குனர் ஆர். ரவிக்குமார் இயக்கிய ‘அயலான்’ என்ற திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படம் 81 கோடி வசூல் செய்து 9ம் இடத்தை பிடித்துள்ளது.
10. கேப்டன் மில்லர்
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கிய ‘கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகியது. இப்படம் 78 கோடி வசூலித்து 10ம் இடத்தை பிடித்துள்ளது.