
நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீப காலமாக நிர்வாகிகள் பலர் விலகி வருகிறார்கள். தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் உட்பட கட்சியை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அடுத்தடுத்து கூண்டோடு விலகுகிறார்கள். அதாவது சீமானின் செயல்களில் தங்களுக்கு திருப்தி இல்லாததால் விலகுவதாக கூறி அவர் மீது பல குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர்.
அந்த வகையில் தற்போது சீர்காழியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அந்த கட்சியிலிருந்து விலகிய அதிமுகவில் இணைந்துள்ளனர். அவர்கள் சீமானின் செயல்பாடுகள் பிடிக்காமல் கட்சியிலிருந்து விலகுவதாக கூறியுள்ளனர். மேலும் ஏற்கனவே கடந்த வாரம் 100க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் விலகினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.