
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேதுபாவாசத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோனிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதுடைய ஹரிணி என்ற பெண் குழந்தையும், ஒன்றரை வயதுடைய தர்னிஷ் என்ற ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்த நிலையில் மோனிஷா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது தர்னிஷ் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தர்னிஷ் மழை நீர் செல்லும் வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்துவிட்டான்.
இதனையடுத்து மோனிஷா விளையாடிக் கொண்டிருந்த தனது மகன் காணாமல் போனதை அறிந்து குழந்தையை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். அப்போது சிறிது தொலைவில் வாய்க்காலில் குழந்தையின் உடல் மிதந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் தனது குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு தர்னிஷை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.