
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்தது . இதனால் தமிழகத்தில். உள்ள பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. தமிழக அரசு மக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டது. விழுப்புரத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு செய்தபின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, விழுப்புரத்தில் பல்லாருக்கானது மழை பெய்துள்ளது. மழை பாதிப்புகளை கண்காணித்து வருகிறோம். விழுப்புரத்தில் மூன்று அமைச்சர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் ஆய்வு நடந்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் 26 முகாம்களில் 1300க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார்.