
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரைசென் மாவட்டத்தில் வசிக்கும் 15 வயது சிறுமி தனது 21 வயது ஆண் நண்பருடன் வனதேவி கோவிலுக்கு சென்றுள்ளார். அவர்கள் காட்டுப்பகுதி அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற லாரி ஓட்டுனர் தனது 2 நண்பர்களுடன் சிறுமிக்கு அருகே சென்றுள்ளார். அதன் பிறகு மூன்று பேரும் இணைந்து சிறுமியின் நண்பனை கடுமையாக தாக்கியுள்ளனர்.
பின்னர் சிறுமியை வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்று மூன்று பேரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்த சிறுமி தனது ஆண் நண்பருடன் காட்டுப்பகுதியை விட்டு வெளியேறி சாலைக்கு வந்து விட்டார். இருசக்கர வாகனத்தின் சாவியை அவர்கள் எடுத்துக் கொண்டதால் சாலை வழியாக நடந்தே காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.