உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹமீர்பூரில் இருக்கும் கிராமத்தில் கடந்த சில வாரங்களாக முதலை அட்டகாசம் செய்தது. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் இருந்தனர். இது குறித்து கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அட்டகாசம் செய்த முதலையை பிடித்து அதன் வாய், கை கால்களை துணி மற்றும் கயிற்றால் கட்டியுள்ளனர்.

இதனையடுத்து வனத்துறை அதிகாரி ஒருவர் 13 அடி நீளம் முதலையை தனது தோளில் தூக்கிக்கொண்டு வயல்களுக்கு வெளியே கொண்டு சென்றார். இதனை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த பகுதியில் இருந்து கடந்த மூன்று நாட்களில் மட்டும் 24 முதலைகள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.