
தமிழகத்தில் தினந்தோறும் இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளின் அளவைப் பொருத்தே தினம் விலை நிர்ணயம் செய்யப்படும்.தொடர்ந்து தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்களின் விலை ஏற்றத்துடனே காணப்படுகிறது. தற்போது பருவநிலை மாற்றம் தொடர்வதால் விளைச்சல் பாதிப்பு காரணமாகவே தொடர்ந்து காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது.
அதேபோல் இன்று சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தையில் விலை குறித்த பட்டியல் பின்வருமாறு, கத்தரிக்காய் கிலோ ரூபாய் 30-க்கும், தக்காளி கிலோ ரூபாய் 32 க்கும், பூண்டு கிலோவிற்கு ரூபாய் 220 ம், சின்ன வெங்காயம் ரூபாய் 70-க்கும், காலிஃப்ளவர் ரூபாய் 20க்கும், கேரட் கிலோ ரூபாய்40க்கும்,முட்டைகோஸ் ரூபாய்20கும், பீன்ஸ் ரூபாய் 20 க்கும்,வெண்டைக்காய் ரூபாய் 30-க்கும்,அவரை ரூபாய் 50க்கும்,கோவக்காய் ரூபாய் 20க்கும்,தேங்காய் ரூபாய் 55 க்கும்,உருளைக்கிழங்கு ரூபாய் 50க்கும் விற்கப்படுகிறது.