நடிகை நயன்தாரா நடித்துள்ள ஆவணப்படம் நள்ளிரவு 12 மணியளவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அதாவது இன்று தன்னுடைய 40 வது பிறந்த நாளை நயன்தாரா கொண்டாடும் நிலையில் இதனை முன்னிட்டு அவருடைய காதல் மற்றும் சினிமா வாழ்க்கை திருமணம் குறித்த ஆவணப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் நடிகை ராதிகா பேசிய காட்சிகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது தனுஷ் தன்னிடம் வந்து வெட்கம் மற்றும் மானம் இல்லையா என்று கேட்டுள்ளார்.

இதனால் ராதிகாவுக்கு ஒரு நிமிடம் என்னவென்று புரியாமல் நின்றார். அப்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா காதலிப்பதாக கூறியுள்ளார். இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவதாக கூறியுள்ளதாக ராதிகா கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இடம் பெற்ற 3 வினாடி காட்சியை பயன்படுத்தியதற்காக தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டுள்ள நிலையில் அதற்கு நயன்தாரா கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். தற்போது ராதிகா பேசிய விஷயம் கோலிவுட் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.