
சோசியல் மீடியா பிரபலம் கிகீ சென். இவர் ஜப்பான் நாட்டை சேர்ந்தவர். இவர் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார். இவர் இந்தியாவை சுற்றி பார்ப்பதற்காக வந்துள்ளார். இவர் விமானம் மூலம் பெங்களூருக்கு வந்த நிலையில் பெங்களூரு ஏர்போர்ட்டை பார்த்து மிகவும் வியப்படைந்துள்ளார்.
அதாவது விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு வசதிகள், ஓய்வெடுக்கும் வரை, பயணிகள் காத்திருக்கும் இடம், உணவு அங்காடிகள் மற்றும் மூங்கிலால் கட்டப்பட்டுள்ள இடங்கள் போன்றவற்றை பார்த்து வியப்படைந்தார். இந்த வீடியோவை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டதோடு “இந்தியாவின் விமான நிலையத்தை கண்டு வியப்படைந்தேன்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
View this post on Instagram