
கேரள மாநிலத்தின் கொல்லம் அருகே உள்ள போதுவாள் கிராமத்தில் நடந்த கொடூரமான கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஜிமோல் என்பவர், கணவனுடன் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார்.
சஜிமோல் மற்றும் பலா பகுதியைச் சேர்ந்த சிபு என்பவருக்குள் நெருக்கமான உறவு ஏற்பட்டது. இதனால் அவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழத் தொடங்கினர். ஆனால், சிபு விசா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டதும், சஜிமோல் அவரைத் தவிர்த்து பெற்றோர் வீட்டிற்கு திரும்பி வாழத் தொடங்கினார்.
இந்நிலையில், சிபு நேற்று முன்தினம் இரவு சஜிமோலை சந்திக்க சென்றார். இருவருக்கும் இடையே தொடங்கிய வாக்குவாதம் மோசமாகத் தகராறில் முடிந்தது. வாக்குவாதம் சிக்கலான நிலைக்கு சென்றபோது, சிபு தன்னிடமிருந்த பெட்ரோலை சஜிமோல் மீது ஊற்றி எரித்தார். பின்னர் தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இந்தச் சம்பவத்தின் விளைவாக சிபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கு விரைந்து வந்த போலீசார் சஜிமோலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் சிகிச்சை பலனின்றி சஜிமோலும் உயிரிழந்தார்.