பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனை குழு தலைவராக இருந்தவர் பிபேக் டெட்ராய். இவர் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். இவர் புனேவில் அரசியல் மற்றும் பொருளாதாரம் இன்ஸ்டிடியூட்டின் தலைவராக பணியாற்றியவர்.

இவர் குடல் தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்ட சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இவருக்கு 69 வயது ஆகிறது. இவருடைய மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய மந்திரிகளும் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.