
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கும் நிலையில் கார் ரேஸராகவும் வலம் வருகிறார். நடிகர் அஜித் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது துபாயில் நடைபெற உள்ள ஒரு கார் ரேஸில் பங்கேற்க இருக்கும் நிலையில் அதற்காக அவர் பயிற்சியில் ஈடுபடும் வீடியோக்கள் வெளியாகி வருகிறது. புதிதாக நடிகர் அஜித் ஒரு கார் ரேஸ் கம்பெனி ஒன்றையும் தொடங்கியுள்ளார். இந்நிலையில் தற்போது துபாயில் நடைபெற உள்ள ஜிடி 3 கோப்பை கார் பந்தய போட்டியில் தல அஜித் பங்கேற்க இருக்கும் நிலையில் அவருக்கு தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிடுள்ள எக்ஸ் பதிவில், உலக அளவில் சிறப்பு கூறிய துபாயில் நடைபெற இருக்கும் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள இருக்கும் நடிகரும் நண்பருமான அஜித்குமார் சாருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை அஜித்குமாரின் ரேசிங், யூனிட்டின், கார், ஹெல்மெட், பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செய்தியை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். இதன் மூலம் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தை உலக அரங்கில் பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்திய அஜித் குமாருக்கு என்னுடைய நன்றிகள். அதன்பிறகு திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் பார்முலா 4 கார்பந்தயம் போன்றவைகளுக்கு வாழ்த்து கூறிய அஜித் சாருக்கு எங்களுடைய அன்பும் நன்றியும். தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்தி காட்டிட நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். மேலும் கார் பந்தயம் போட்டியில் நீங்கள் வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்திட வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.