
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. இந்த படத்தில் மாளவிகா மோகன், பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். அந்த படத்தை இன்னும் ஓட்டி தளத்தில் வெளியிடாமல் உள்ளனர். இந்த நிலையில் பொற்கொடி என்பவர் வைணவர்களை அவமதிக்கும் சில காட்சிகள் தங்கலான் படத்தில் இடம் பெற்றுள்ளதாகவும், அதனை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தணிக்கை சான்றிதழ் பெற்ற தங்கலான் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசானது. அதனை ஓடிடியில் வெளியிடக்கூடாது என தடை விதிக்க முடியாது எனக்கூறி பொற்கொடி மனுவை தள்ளுபடி செய்தனர்.