
மஞ்சு வாரியர் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி அசுரன் திரைப்படத்தின் மூலம் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தனுஷுக்கு ஜோடியாக நடித்த அசுரனில் அவரது பாத்திரம் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. அசுரனின் வெற்றிக்குப் பின்னர், மஞ்சு வாரியர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வேட்டையன் திரைப்படத்தில் நடித்தார்.
1998ஆம் ஆண்டு நடிகர் திலீபை காதலித்து திருமணம் செய்த மஞ்சுவிற்கு, மீனாட்சி என்ற மகள் இருக்கிறார். ஆனால், கருத்து வேறுபாட்டின் காரணமாக 2014ஆம் ஆண்டு திலீபிடமிருந்து பிரிந்தார். மீனாட்சி தனது தாயிடம் நான் உன்னுடன் இருக்க விரும்பவில்லை. நான் அப்பா கூடவே செல்கிறேன் என கூறிவிட்டு சென்றுள்ளார். கலைத்துறையில் தனது வெற்றியை தொடரும் மஞ்சுவாரியர், தனக்குக் கிடைக்கும் கதாபாத்திரங்களில் தனது முழு திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்து வருகிறார்.