
அதிமுக ஆட்சிக்காலத்தின் போது போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த சமயத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக இருந்த குற்றச்சாட்டின் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பின் திமுக கட்சிக்கு மாறிய செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில் அவரை அமலாக்கத்துறை சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்தது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கிய நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்தார். அவரை உன்னுடைய தியாகம் அளப்பெரியது என்று கூறி முதல்வர் வாழ்த்தினார்.
அதன் பின் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து செந்தில் பாலாஜி அவர் காலில் விழுந்த ஆசீர்வாதம் வாங்கினார். இந்நிலையில் செந்தில் பாலாஜி தியாகம் செய்தார் சிறைக்கு சென்றார் என்று சீமான் உள்ளிட்ட பலரும் விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் விமர்த்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தியாகம் என்ற சொல்லுக்கு மரியாதை போய்விட்டது. ஊழல் செய்து சிறைக்கு சென்ற வரை தியாகம் செய்தவர் என்று கூறுவது வெட்கக்கேடானது. தமிழகத்தில் கொலைகள் நடக்காத நாட்களே இல்லை. ஆனால் திமுக அரசு இன்னும் விழித்துக் கொள்ளாமல் கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.