
தண்டவாளத்தில் கம்பி வைத்து ரயில் கவிழ்க்க முயற்சி: லோகோ பைலட்டின் சாமர்த்தியத்தில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது
சத்தீஸ்கரில், ரயில் போக்குவரத்தை பாதிக்கும் வகையில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் பிலாஸ்பூர் அருகே வந்துகொண்டிருந்த போது, தண்டவாளத்தில் 6 அடி நீள இரும்பு கம்பி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சதியால் பெரும் ரயில் விபத்து ஏற்படக் கூடிய அபாயம் இருந்தது.
இந்த சூழ்நிலையில், லோகோ பைலட் தனது துணிச்சலையும், சாமர்த்தியத்தையும் காட்டி ரயிலை உடனடியாக நிறுத்தினார். இதன் மூலம், ஒரு பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே பாதுகாப்பு குறித்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, லோகோ பைலட் அளித்த புகாரின் அடிப்படையில் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தில் கம்பி வைத்தவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.