
தென்னிந்தியாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தளபதி விஜய். இவர் நடித்து தற்போது வெளியான கோட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் விஜய் தனது சம்பளமாக 200 கோடி வாங்கியுள்ளார் என தயாரிப்பாளர் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் சமூகத்தில் அது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியானது. இந்த திரைப்படம் தான் அவரது கடைசி திரைப்படம்.
இந்த திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கும் நிலையில் அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் இந்த படத்திற்கு சுமார் 275 கோடி ரூபாயை விஜய் சம்பளமாக பெற்றுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் இதனால் இந்திய அளவில் நடிகர் விஜய் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் முதலிடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதலிடத்தில் இருந்த நிலையில் அவரை பின்னுக்கு தள்ளி நடிகர் விஜய் முதலிடத்திற்கு வந்துள்ளார்.