
மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டால் எலான் மஸ்க்கிற்க்கு அமைச்சர் பதவி அளிக்கப் போவதாக முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். இவருக்கு உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் முழு ஆதரவை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அதிபர் தேர்தலில் தான் மீண்டும் வெற்றி பெற்றால் எலான் மஸ்க்கிற்க்கு அமைச்சர் பதவி அல்லது ஆலோசகர் பதவி அளிக்கப் போவதாக டிரம்ப் கூறியுள்ளார்.
அதே சமயத்தில் அவர் தன்னோடு அரசு அமைந்தால் மின்சார கார்களுக்கு அளிக்கப்படும் 7500 டாலர் வரி சலுகையை ரத்து செய்ய போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மின்சார கார்கள் விலை மிக அதிகம் என்றும் ரீசார்ஜ் செய்யாமல் அவை அதிக தூரம் செல்லாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் எலான் ஒரு புத்திசாலி அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.