
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் துஷாரா விஜயன். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு “போதை ஏரி பித்து மாறி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்பு 2021 ஆம் ஆண்டு “சார்பட்டா பரம்பரை” என்னும் படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கவனத்தை இவருக்கு பெற்று தந்தது. அதன்பின் தற்போது இவர் “ராயன்” என்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு தங்கையாக நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இவர் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக “வீரதீர சூரன்” என்ற படத்திலும் நடித்துள்ளார். அதன்பின் அவர் நடிகர் ரஜினிகாந்த் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் ஒரு பேட்டியல் தூஷாரா விஜயன் “வேட்டையன்” என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.
அதில் இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிக்க இருந்த சூழலில் அதற்கு முந்தைய நாளில் தனக்கு காய்ச்சலே வந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந்துடன் நடித்தது தனக்கு ஒரு கனவு மாதிரி இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.