சென்னையில் நேற்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் போது சீமான் பேசியதாவது, கடந்த 15 வருடங்களாக என்னை ஒரு பெண்ணை வைத்து அவமானப்படுத்த முயற்சித்தார்கள். ஆனால் தற்போது அதன் காரணமாக எனக்கு பெண் பாலோயர்ஸ் அதிகரித்துள்ளனர்.
அதன்பிறகு திமுக ஆட்சியில் ஒரு மாதத்தில் 133 கொலைகள் நடந்த நிலையில் 134 வது கொலையாக ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் அனைவரும் 30 வயதிற்கு கீழ் உள்ளவர்கள். இளைஞர்களை திமுக குற்றத்தின் சமூகமாகவே உருவாக்கி வருகிறது. தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியதோடு சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது. மேலும் எல்லாவிதமான தீய குற்றங்களுக்கும் இந்த அரசு குழு அமைக்கிறது என்று கூறினார்.
