
கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு பகுதிகளில் அடுத்தடுத்து 3 இடங்களில் கடந்த 29ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் பலர் மண்ணில் புதைந்துள்ளனர்.
இவர்களை தேடும் பணிகள் என்பது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையின் தற்போது பலி எண்ணிக்கை 341 ஆக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து 250 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்த 200-க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் அவர்கள் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.