கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து 3 நாட்களாக மீட்புப் பணிகள் என்பது துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்த நிலையில் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

இதனால் தொடர்ந்து பலி எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது. தற்போது பலி எண்ணிக்கையானது 316 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்னும் 240 பேரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. அதோடு சேரும் சகதியுமாக இருக்கும் பகுதிகளில் இயந்திரங்களின் உதவியோடு தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.