தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இவர் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி பக்னாணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் அடிக்கடி சமூக வலைதளங்களில் கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் பல்வேறு விஷயங்களை பேசி உள்ளார். அப்போது அவரிடம் கதை சரியில்லை என்று கூறி படங்களின் நிராகரித்துள்ளீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் நான் ஒருபோதும் கதை நன்றாக இல்லை என்று கூறியது கிடையாது. அந்த கதை எனக்கு சரிப்பட்டு வராது என்று கூறி தான் நிராகரித்துள்ளேன். நான் எப்போதும் சக நடிகர்களுடன் நட்பாக பழகுவேன் என்று கூறினார். அதன் பிறகு லிப்லாக் காட்சியில் நடிப்பீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் படத்திற்கு தேவைப்பட்டால் அப்படி நடிப்பேன். இதற்கு முன்பும் நான் லிப் லாக் காட்சியில் நடித்துள்ளேன். ஆனால் பப்ளிசிட்டிக்காக அதுபோன்று காட்சிகள் படத்திலிருந்து நிச்சயம் நடிக்க மாட்டேன். மேலும் கதைக்கு தேவைப்பட்டால் மட்டும்தான் நடிப்பேன் என்று கூறினார்.