பொதுவாக இயற்கையாக காணப்படும் ஒவ்வொன்றும் பார்க்கும் பொழுது நமக்கு புத்துணர்ச்சியை தரக்கூடியது. அதில் முக்கிய இடத்தை பூக்கள் எடுத்துக் கொள்கின்றன. இயற்கையில் காணப்படும் பூக்களின் மனம் அதனுடைய நிறம், அழகு போன்றவை நம்மை வியப்பில் ஆழ்த்தும். காலை எழுந்தவுடன் வீட்டின் முற்றத்தில் இருந்து வெளியாகும் ரோஜா, மல்லி மலர்களின் வாசனை சுவாசிக்கும் பொழுது மனதிற்கு இதமாக இருக்கும்.

ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் இருக்கிறது. அதன் அடிப்படையில் குரங்கு போன்ற முகமுடைய பூ ஒன்று இருக்கிறது தெரியுமா.? குரங்கு பூ என்று அழைக்கப்படும் பூக்கள் பெரிய குடும்பத்தைச் சார்ந்தவை. இதில் சுமார் 26,000 இனங்கள் காணப்படுகிறது. அதன் சிறப்பை கண்கவர் வண்ணங்களும் வித்தியாசமான அமைப்புகளும் தான். இந்த பூக்கள்  தென் அமெரிக்கா நாடுகளான பெரு, ஈக்குவடார் போன்ற இடங்களில் உள்ள காடுகளில் மட்டுமே வளர்கின்றன. மங்கி ஆர்கிட்  என்று அழைக்கப்படும் இந்த பூக்கள் பார்ப்பதற்கு குரங்கின் முக அமைப்பில் இருக்கும்.