தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவான சிவாஜி திரைப்படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தில் நடிகை ஸ்ரேயா ஹீரோயின் ஆக நடித்திருந்த நிலையில் விவேக், சாலமன் பாப்பையா மற்றும் வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் சாலமன் பாப்பையாவின் மகள்களாக அங்கவை மற்றும் சங்கவை கதாபாத்திரங்களில் இருவர் நடித்திருந்தனர். அந்தப் படத்தில் நடித்த இரட்டை சகோதரிகளை வைத்து நடிகர் விவேக் செய்த காமெடிகள் அனைத்தும் மிகவும் ஹிட்டானது. இந்நிலையில் அங்கவை மற்றும் சங்கவை இரட்டை சகோதரிகளின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இது சிவாஜி படத்தில் படித்தஅங்கவை சங்கவையா என வியப்படைந்துள்ளனர்.

