ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியை முன்னிட்டு நேற்று இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதிய பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் ரசிகர் ஒருவர் திடீரென மைதானத்திற்குள் நுழைந்துவிட்டார். அப்போது அங்கு ஓடிவந்த 5 அமெரிக்க காவலர்கள் உடனடியாக அந்த ரசிகரை பிடித்து அவர் மீது அமர்ந்த தரையில் அமுக்கி பிடித்தனர்.

அந்த ரசிகர் மீது காவலர்கள் அனைவரும் படுத்த நிலையில் அவரை கடுமையாக எச்சரித்தனர். அப்போது ரோஹித் சர்மா அந்த ரசிகரை விட்டு விடும்படி அவர்களிடம் கேட்டுக் கொண்டார். அந்த அளவுக்கு காவலர்கள் கடுமையாக நடந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மேலும் உலகக் கோப்பை போட்டியில் பயங்கரவாதிகளின் மிரட்டல் அச்சுறுத்தல் இருப்பதால் காவலர்கள் அப்படி நடந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.