சென்னை ஐஐடி மற்றும் இளையராஜா கூட்டணியில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. புதிய ஆராய்ச்சி மையத்திற்கு சென்னை ஐஐடி வளாகத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு இசைஞானி இளையராஜா அடிக்கல் நாட்டில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், இரு கிராமத்திலிருந்து வந்து இசையை கற்றுக்கொள்ள சென்னை வந்தேன். வந்த நாளிலிருந்து இந்நாள் வரை நான் இசை கற்றுக் கொள்ளவில்லை. எல்லோரும் நான் சாதித்து விட்டதாக கூறுகிறார்கள். நான் அப்படி செய்யவில்லை. மூச்சு விடுவது எப்படி இயற்கையாக நடக்கிறதோ அப்படியே இசையும் எனக்கு இயற்கையாக வருகிறது என்று கூறியுள்ளார்.