மிதுனம் ராசி அன்பர்கள்
இன்று காலையில் கொஞ்சம் பதட்டமாக காணப்படுவீர்கள். செய்கின்ற வேலையை மட்டும் நிதானமாக செய்யுங்கள். அரசு வழியில் புதிய வேலை வாய்ப்புகள் கண்டிப்பாக இருக்கும். இன்று எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. புத்தி கூர்மையுடன் செயல்பட்டு வாழ்க்கையை சரியான பாதையில் எடுத்துச் செல்வீர்கள். வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான சூழல் உள்ளது. அனுகூலமான பலன் ஏற்படும். இன்று நல்ல மாற்றங்களும் ஏற்றங்களும் உண்டு.
இன்று நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வீர்கள். மருத்துவம் சார்ந்த செலவுகள் கொஞ்சம் ஏற்படும். ஆயுதங்களை கையாளும் போது கவனமாக இருங்கள். வாகனங்களில் பயணிக்கும் போதும் கவனம் தேவை. எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவ போய் வீண்பழி ஏற்படும். பார்த்துக் கொள்ளுங்கள். இன்று கணவன் மனைவி இருவரும் ஒருவரே ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். உங்களை சார்ந்தவர்களே உங்களை தவறாக நினைக்கலாம் கவனமாக இருங்கள்.
இன்று பெண்களுக்கு திட்டம் தீட்டி வெற்றி பெறும் சூழல் உள்ளது . பெண்கள் யோசித்து எந்த ஒரு பணியிலும் ஈடுபட வேண்டும். அவசரப்பட வேண்டாம். சூழ்நிலையை கருத்தில் கொண்டு முடிவெடுக்க கற்றுக் கொள்ளுங்கள். பெண்கள் ஒரு முறை திருமுறை சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி கிடைக்கும். நட்பால் நல்லது நடக்கும் ஆசைப்பட்ட பொருளை வாங்கி மகிழுங்கள். இன்று மாணவர்கள் கல்வி மீது முழு அக்கறை கொள்ள வேண்டும். நன்றாக படித்து எழுதி பார்க்க வேண்டும். எதிலும் யோசித்து செயல்படுங்கள் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது இளமஞ்சள் நிறத்தில் ஆடை அணியுங்கள். இளம் மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதே போன்று இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபடுங்கள் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.