
இந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரக்கூடிய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பல்வேறு மொழியில் அதிக திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து உள்ளார். இப்போது “இறைவன்” படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக மற்றும் இந்தியில் “ஜவான்” படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா நடித்து வருகிறார்.
நயன்தாராவின் 75வது திரைப்படத்தை டைரக்டர் நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் தயாராக இருக்கும் இந்த படத்தில் நடிகர் ஜெய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதோடு சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கக்கூடிய இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்நிலையில் நயன்தாரா-75 படக்குழுவினர் ரஜினியை சந்தித்து ஆசிப் பெற்று உள்ளனர். அதனை தொடர்ந்து இப்படத்தின் சூட்டிங் பூஜையுடன் நடந்தது.
With the blessings of one and only Superstar @rajinikanth, we have commenced shooting for #LadySuperstar75 #Nayanthara #N75 @Nilesh_Krishnaa @sathyaDP @MusicThaman @editorpraveen @Gdurairaj10 @ZeeStudios_ @tridentartsoffl @NaadSstudios #Ravindran @Naadsstudios @SETHIJATIN… pic.twitter.com/8SdjeAsSvk
— Zee Studios South (@zeestudiossouth) April 8, 2023