ரஷ்யா – உக்கரைன் விவகாரத்தில் சீனா ரஷ்யா பக்கம் நிற்கும் என்றால் அது மூன்றாம் உலகப் போருக்கு துவக்கமாக இருக்கும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த குற்றச்சாட்டை சீனா முழுவதுமாக மறுத்துள்ளது. மேலும் ரஷ்யாவிற்கு சக்தி வாய்ந்த ஆயுதங்களை கொடுக்கவில்லை எனவும் கூறியுள்ளது.

இது குறித்து உக்கரைன் அதிபர் கூறியுள்ளதாவது, இந்த போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக சீனா களமிறங்காமல் இருப்பது முக்கியமான விஷயம். உக்ரைன் பக்கம் சீனா இருக்க வேண்டும் என இந்த சூழலில் தான் விரும்புவதாக கூறிய அதிபர் ஆனால் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே நம்புகிறேன் என தெரிவித்தார்.

இருப்பினும் இங்குள்ள சூழலை விரிவாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ள அதிபர் ரஷ்யாவிற்கு ஆதரவாக சீனா களமிறங்கும் என்றால் உண்மையில் அது மூன்றாம் உலக போருக்கான தொடக்கம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே மூன்றாம் உலகப்போர் தொடர்பில் அதிபர் எச்சரிக்கை விடுத்த அதே நாளில் அமெரிக்க அதிபர் ஜோப் பைடன் உக்ரைனுக்கு ரகசிய பயணம் ஒன்றை மேற்கொண்டார். அது மட்டும் இன்றி 500 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க இருப்பதாக உறுதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.