ரகசிய திருமணம் செய்ததாக ஆவணங்களை வெளியிட்ட நடிகை, ஆனால் திருமணத்தை காதலன் மறுத்துள்ளார்.
ஹிந்தி சினிமா உலகில் பிரபல நடிகையாக வளம் வருபவர் நடிகை ராக்கி சாவந்த். இவருக்கு 44 வயதாகும் நிலையில் சென்ற 2019 ஆம் வருடம் ரித்தி சிங் என்பவரை திருமணம் செய்து கொள்ள இவர்களின் திருமண வாழ்க்கை 2022 முடிவுக்கு வந்தது. இதன்பின் ரிதீஷ் சிங்கை நடிகை விவாகரத்து செய்தார். இதன்பின் மைசூரை சேர்ந்த ஆதில் என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டு பழகி வந்த நிலையில் இருவரின் திருமணமும் விரைவில் நடைபெறும் என கூறப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு திருமணம் நடந்து விட்டதாகவும் எளிமையாக நடைபெற்றதாகவும் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றது.
மேலும் இது குறித்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. இருவரும் இஸ்லாமிய முறைப்படி சென்ற மே மாதம் 21ஆம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளனர். மேலும் நடிகை தனது பெயரை ராக்கி சாவந்ந் பாத்திமா என மாற்றியுள்ளார். இந்த நிலையில் அவரின் காதலர் திருமணத்தை முற்றிலுமாக மறுத்து இருக்கின்றார். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை எனவும் திருமணத்தை போலி எனவும் கூறியுள்ளார்.
இது குறித்து நடிகை தெரிவித்துள்ளதாவது, அவருக்கு பைத்தியமா? திருமணத்திற்கான அனைத்து ஆதாரங்களையும் நான் கொடுத்திருக்கின்றேன்/ அவர் மறுப்பதற்கான காரணம் எனக்கு தெரியலை. நான் அவரை கண்மூடித்தனமாக நம்பி ஏழு மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டேன்.
அவர் என்னிடம் திருமணம் குறித்த தகவலை வெளியே கூற வேண்டாம் என கேட்டுக் கொண்டிருந்தார். எங்கள் திருமணத்தை ஏன் மறைக்கின்றார் என தெரியவில்லை. நான் நேற்று அவரிடம் பேசினேன். எங்கள் திருமணத்தை அறிவிக்க வேண்டிய நேரம் இது. அவர் பெற்றோருக்கு பயப்படுகிறாரா அல்லது இந்து பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் இப்படி சொல்கின்றாரா என தெரியவில்லை என கூறியிருக்கின்றார்.