இன்றைய தினம் தமிழக முழுவதும் துணிவு, வாரிசு திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படம் ரிலீஸ் ஆவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழக அரசு சார்பில் 13, 14,15 மற்றும் 16 ஆகிய நான்கு நாட்களுக்கு அதிகாலை சிறப்பு காட்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. வாரிசு, துணிவு திரைப்படங்கள் இன்று வெளியாகி இருக்கின்ற நிலையில் திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 12, 13 மற்றும் 18 ஆகிய தேதிகளில் திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியுள்ளது.