இந்தியாவில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி கேரள மாநிலத்தில் ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பேகம் ஹஜ்ரத் மஹால் தேசிய உதவித்தொகை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது . இதற்காக முந்தைய வகுப்பில் மாணவர்கள் குறைந்தபட்ச 50 சதவீதம் அல்லது அதற்கு இணையான மதிப்பெண்ணை பெற்றிருக்க வேண்டும் .

மேலும் குடும்ப உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் பெற உள்ள நிலையில் விண்ணப்பிக்க தேவையான விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை, தகுதியான அளவுகோல்கள் மற்றும் இது தொடர்பான அனைத்து விவரங்களும் அதிகாரபூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது