இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக பிற்படுத்தப்பட்ட பிரிவை சார்ந்த மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி தற்போது கேரளாவில் உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு துறை சார்பாக ஒவ்வொரு வருடமும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

அதன்படி நடப்பு கல்வி ஆண்டுக்கான உதவி தொகையை பெற செப்டம்பர் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. மேலும் பள்ளிகள் உதவித்தொகை தொடர்பான விவரங்களை செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடித்து அனுப்ப வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.