கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான அவசர ஆலோசனை சற்றுமுன் தொடங்கியது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1000-ஐ கடந்துள்ளதால் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தின் முடிவில் கொரோனா நெறிமுறைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம்.

இந்நிலையில் இந்தியாவில் இணைய பயனர்கள் எண்ணிக்கை 85 கோடியாக அதிகரித்துள்ளதாக பாரத பிரதமர் மோடி கூறியுள்ளார். ITU புதிய அலுவலகம் மற்றும் புத்தாக்க மையத்தை திறந்து வைத்து பேசிய அவர், இந்தியாவில் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் அதிக அளவில் இணைய பயனர்கள் உள்ளனர். கடந்த 9 ஆண்டுகளில் 25 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆப்டிக்கல் பைபர்களை தனியார் துறையுடன் இணைந்து அரசு அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.