
தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்ற போது ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி அவர் கூறியதாவது, எம்ஜிஆர் எந்த இடத்தில் இருந்து கட்சி தொடங்கினாரோ அதே இடத்தில் இருந்துதான் என்று நாங்களும் கட்சி தொடங்கியுள்ளோம். இனி விஜய் தளபதி கிடையாது வெற்றி தலைவர். நீங்கள் எம்.ஜி.ஆரை விமர்சித்ததால் அவர் ஆட்சியில் இருக்கும் வரை நீங்கள் ஒர்க் பிரம் ஹோம் செய்து கொண்டிருந்தீர்கள். உங்களுடைய 70 வருட அரசியல் மற்றும் குடும்ப ஆட்சியை ஒட்டுமொத்தமாக முடிவுக்கு கொண்டு வருவோம். ஊழல் அமைச்சர்கள் மற்றும் ஊழல் குடும்பத்தை தூக்கி எறிய தயாராகி விட்டோம்.
நீங்கள் சம்பாதிப்பதற்காக தான் அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஊழல் பணத்தை செலவு செய்வதற்காக லண்டனுக்கு செல்கிறீர்கள். ஆனால் விஜய் அரசியலுக்காக தன்னுடைய வருமானத்தையே என்று தூக்கி எறிந்து விட்டு வந்துள்ளார். திமுக பிரசாந்த் கிஷோர் பற்றி தவறான கருத்துக்களை பரப்பி வரும் நிலையில் இன்று தேர்தல் வியூகங்கள் என்ற பெயரில் மற்ற கட்சிகளை உடைக்கும் பணிகளை தான் செய்து வருகிறது. திமுக ஜாதி அரசியல் செய்கிறது. ஆனால் தமிழக வெற்றி கழகத்தில் சாதி என்ற பேச்சுக்கு இடமில்லை. தமிழக சட்டசபையில் திமுக எம்எல்ஏ ஒருவர் பேசினால் கூட காட்டப்படுவது கிடையாது. மேலும் எந்த தீய சக்தியை எதிர்த்து எம்ஜிஆர் கட்சி தொடங்கினாரோ என்று அதே இடத்திலிருந்து தான் நாங்களும் கட்சி தொடங்கியுள்ளோம் என்று சூளுரைத்தார்.