சமீப காலமாக தமிழ் திரையுலகில் படம் ரிலீஸ் ஆன உடனே விமர்சனம் செய்து விடுகின்றனர். எதிர்மறை விமர்சனங்களால் படத்தின் வசூல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. சமீபத்தில் கூட மாபெரும் பொருட்ச அளவில் எடுக்கப்பட்ட கங்கா திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களால் எதிர்பார்த்த அளவு வசூலை எட்டவில்லை. இந்த நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, ரிலீசுக்கு பிறகு படம் குறித்து ஏழு நாட்களுக்கு விமர்சனம் செய்யக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தில் தடை பெற வேண்டும். திரையரங்க வாசலிலேயே வைக்கப்படும் எதிர்மறை விமர்சனங்களால் வசூல் பாதிக்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து அடுத்த வாரம் சங்க கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார்.