தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து  பிரபலமானவர் மொட்டை ராஜேந்திரன். இவருக்கு தற்போது 66 வயது ஆகும் நிலையில் இன்னும் சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுடன் இருக்கிறார். இதற்கான காரணம் குறித்து ஒரு பேட்டியில் அவர் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, நான் ஸ்டாண்ட்மேன் ஆக இருந்தபோது ஒரு ஏரியில் குதிக்க சொன்னார்கள்.

அதில் குதித்த பிறகு தான் அது கெமிக்கல் தண்ணீர் என்பது எனக்கு தெரியவந்தது. அதற்குப் பிறகுதான் என்னுடைய தலை முடி கொட்டி போனது. நான் வீட்டில் என்ன செய்தாலும் சாப்பிடுவேன். தயிர் சாதத்துடன் ஊறுகாய் வைத்துக் கூட சாப்பிடுவேன். நான் ஜிம் போக மாட்டேன். எப்போதுமே இந்திய முறைப்படி தான் உடற்பயிற்சி செய்யவேன்‌. இதனால் என்னுடைய உணவு பழக்கவழக்கங்கள் குறித்து நான் கவலைப்படுவது கிடையாது என்று கூறியுள்ளார். மேலும் மொட்டை ராஜேந்திரன் தன்னுடைய சிக்ஸ் பேக்ஸ் உடற் கட்டுக்கான காரணம் குறித்து பேசியது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.