ஐபிஎல்லில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் லசித் மலிங்காவை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தார் ரபாடா..

இந்த ஐபிஎல் சீசனின் 18வது போட்டியில் மிகப்பெரிய சாதனை ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது. வியாழன் மாலை, ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. கடைசி பந்து வரை உங்களை பதட்டத்தில் வைத்த  இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றது..

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி குஜராத் அணிக்கு எதிராக 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலாக இலக்கை நிர்ணயித்தது. பின் பஞ்சாப் அணியை 1 பந்து மீதமிருக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் வீழ்த்தியது. பஞ்சாப் அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டுமே தோல்வியடைந்தன.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளரும் மூத்த வீரருமான லசித் மலிங்காவின் சாதனையை ரபாடா முறியடித்துள்ளார்.

குஜராத் பேட்ஸ்மேன் விருத்திமான் சாஹாவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ககிசோ ரபாடா ஐபிஎல்லில் தனது 100 விக்கெட்டுகளை பூர்த்தி செய்தார். இந்தியன் பிரீமியர் லீக்கில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.. இதன் மூலம் இலங்கையின் மூத்த வீரர் லசித் மலிங்காவை ரபாடா முந்தினார். மலிங்கா தனது 70வது ஐபிஎல் போட்டியில் 100வது விக்கெட்டை வீழ்த்தினார்.

ரபாடா குறைந்த பந்துகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தினார் :

ககிசோ ரபாடா மிகக் குறுகிய இன்னிங்ஸில் (ஐபிஎல் 2023) இந்த சாதனையைச் செய்துள்ளார். மேலும், மற்ற பந்துவீச்சாளர்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த பந்துகளை வீசியவர்.ஐபிஎல் தொடரில் ரபாடா 1438 பந்துகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் லசித் மலிங்கவின் பெயர் இரண்டாவது இடத்தில் உள்ளது. 1622 பந்துகளில் 100 விக்கெட்டுகளை கடந்துள்ளார்.

ஐபிஎல்லில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் :

ககிசோ ரபாடா – 64 போட்டிகள்

லசித் மலிங்கா – 70 போட்டிகள்

புவனேஷ்வர் குமார் – 81 போட்டிகள்

ரஷித் கான் – 83 போட்டிகள்

அமித் மிஸ்ரா – 83 போட்டிகள்..