தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தெலுங்கு சினிமாவிலும்  நடித்து வரும் நிலையில் கன்னடத்திலும் தற்போது அறிமுகமாக இருக்கிறார். இவர் சமீப காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வரும் நிலையில் அதில் ஹிட் கொடுக்க முடியாமல் இருக்கிறார்.

இவர் தெலுங்கு சினிமாவிலும் தற்போது கவனம் செலுத்தி வரும் நிலையில் அம்மா ரோல் என்றாலும் தயங்காமல் நடிக்கிறார். இந்நிலையில் தற்போது இயக்குனர் அனில் ரவுப்புடி இயக்கத்தில் நடிகர் வெங்கடேஷ் நடிக்கும் ஒரு படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருக்கிறார். மேலும் 63 வயது நடிகருக்கு அவர் ஜோடியாக நடிப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.